Wednesday, August 28, 2013

http://youtu.be/WGmOc8aKS7Q


தென்காசியில் (குற்றாலம் அருவிக்கு 6 கிலோமீட்டர் வடக்கே உள்ள ஊர்) கிறிஸ்துவுக்கு வாலிபர் அலுவலகத்தில் வைத்து நடந்த யாவே மீடியாவின் கூடுகைக்கு 25 பேர் வந்திருந்தனர். இந்த கூடுகையில் பங்கு பெற்றவர்களால் புகைப்படங்களை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட ஒரு குறும்படத்தின் சுட்டி இது.

Sunday, April 14, 2013

கதை கதையாம்


இன்னும் ஒரு கற்பனை கதைப்பு - உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.


கிருலப்பனையில் நின்று கொண்டிருந்த என்னை சந்திக்க சுபேந்திரன் வந்திருந்தார். அவர் வந்து சேர்ந்ததும் தான் வந்து சேர்ந்துவிட்டதாகத் தன் மகனிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லி முடித்ததும் கைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு என்னிடம் தன் உரையாடலைத் தொடர்ந்துவிட்டார்.

"உங்க மனைவி கிட்ட பேசலியா?" என்று கேட்டேன் நான்.

"நான் எதுக்கு அவங்க கிட்ட பேசணும்?" என்று பதில் கேள்வி கேட்டார் சுபே.

"என்னங்க நல்ல உறவுக்கு அடிக்கடி பேசுறது தானே நல்லது?" இது நான்.

"பேசறதுக்கு சில நேரம் இருக்குது. நான் என் மனைவியிடம் அதிகம் பேசறதே இல்ல. எப்பவாவது பேசுவேன்" என்றார் சுபே.

"அடப்பாவிகளா! எப்பவாவது தான் பேசுவீங்களா?" அப்படின்னா எப்படிய்யா இத்தனை காலம் குடும்பம் நடத்துறீங்க?" சந்தேகத்தை வெளிப்படையாகச் சொன்னேன் நான்.

"குடும்ப வாழ்க்கையில மட்டுமில்ல, எந்த உறவிலேயும் பேசுறதுக்கு ஒரு காலம் இருக்கு. எப்பவுமே பேசிக்கிட்டே இருந்தா வெறுப்பாப் போயிரும்" தெளிவாகப் பேசி என்னைக் குழப்பிவிட்டார் சுபே.

"அப்படின்னா எங்கிட்ட இத்தனை காலமா நண்பரா இருக்கிறீங்க. அடிக்கடி பேசறீங்க. இப்பக் கூட எங்கூட பேசிட்டுத் தானே இருக்கறீங்க?"

"நான் உங்கக் கூட பேச இல்லியே? பேசற மாதிரி நீங்க நடந்துக்கவும் இல்லியே!" சுபே என்னைக் குழப்பவும்  ஒரு அழைப்பு வந்தது. அமைதியாக இருக்கும்படி சைகை காட்டியபடியே "என்னோட மனைவி கதைக்கிறாங்க" என்றார்.

சிறிது நேரம் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே சுவராசியமாகப் பேசிக் கொண்டே இருந்தார் சுபே. அரை மணி நேரத்துக்குப் பின் வந்த அவரிடம் நான் கேட்டேன், 

"என்னங்க, மனைவி கிட்ட பேச மாட்டேன்னு சொன்னீங்க, இப்போத் தான் நல்லா கடல போட்டு முடிச்சீங்க. அது பரவாயில்ல, எங்கிட்ட பேசவே இல்லைன்னு சொன்னீங்களே, அது என்ன கணக்கு?"

"ஐயோ, கதைக்கறதுக்கும், பேசறதுக்கும் வித்தியாசம் தெரியலியா உங்களுக்கு?"

"இது என்ன புதுக்கத?"

"கதைக்கிறதுன்னா உங்க மொழியில பேசறது. பேசறதுன்னா எங்க மொழியில் ஏசுறது அல்லது திட்டறது."

நான் கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாகக் கேட்டேன், "அப்படின்னா நண்பர்கள் நேசிக்கிறவங்க கூட பேசறதே முடியாதா?"

"ஐய்யோ, பேசாதவங்க நண்பர்களே இல்ல, ஆனா, கதைக்கிறது தான் அதிகம் இருக்கணும். அடிக்கடி பேசிட்டே இருக்கற மாதிரி நடந்துக்கக் கூடாது."

உரையாடலைக்கூட சுவராசியமான கதை போல இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஈழத்துத் தமிழ் நண்பரை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

(அப்பாடி. விமான நிலையத்தில் காத்திருக்கும் போது எழுத வேண்டும் என்ற என் நீண்ட கால கனவு இப்போது, இந்த படைப்பை எழுதியதில் நிறைவேறிவிட்டது. நல்ல துவக்கம் தான், தொடரும், தொடர வேண்டும்.)

Monday, February 25, 2013

பசித்துப் புசி.




(சுத்தமான கற்பனை. உண்மைப் பெயர்களும், சூழலும் சுவை சேர்க்க கலக்கப்பட்டிருக்கின்றன.)

விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது சரியான பசியுடன் வந்தேன். மதுரையிலிருந்து கொழும்புவுக்கு வரும் அந்த குட்டி விமானத்தில் தண்ணீரோ, ஒரு சின்ன மிட்டாயோ கூட மரியாதைக்காகவோ மனிதாபிமானத்தாலோ கொடுக்கவில்லை.

மருது பாண்டியன் ஒரு டொக்சியில் என்னை அழைத்துச் சென்றார். "வழியிலேயே சாப்பிடலாமா அல்லது கெஸ்ட் ரூமுக்குப் போய் ஆறுதலாக சாப்பிடலாமா?" என்று கேட்டார். நான் "போய் சாப்பிடலாம்" என்றேன். அதற்காகப் பிறகு தான் வருந்தினேன். 

கிரிலப்பனைக்கு வந்து பெட்டியை வைப்பதற்கு முன்பே சாப்பாட்டைத் தேடினேன். ஹரிஹரன் தான் வந்தார். கதைத்தார். நான் பேச்சிலேயே "மணி மூன்று ஆகிவிட்டதே, சாப்பிடலாமா?" என்று மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தேன். அவர் கதைத்துக் கொண்டே இருந்தார். செவிக்குணவு இல்லாத போது தானே சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்? காத்திருந்தேன். தனியொருவனாகிய எனக்கு உணவில்லாதபோது இவர் கதைத்தலையாவது அழித்திடுவோம் என்று துணிந்து கேட்டுவிட்டேன், "சாப்பிடப் போகலாமா?" என்று.

" நீங்கள் போய் வாஷ் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் சாப்பிடப் போகிறதுக்கிருக்கு." என்றார் ஹரன்.

"அப்போ எனக்கு சாப்பாடு?" உரிமைக்காக குரல் கொடுத்தேன்.

"நாங்க தான் சாப்பிடப் போகிறதுக்கு இருக்கு." அழுத்திச் சொன்னார் ஹரன். பாண்டியனும் "ஓம்" என்றார். 

"நானும் உங்க கூட சாப்பிட வர்றேனே?" கோரிக்கை வைத்தேன்.

"எங்களுக்குத் தான் சாப்பாடு இருக்கு." என்றார் பாண்டியன்.

"எனக்கும் ஏதாவது வாங்கிட்டு வரமுடியுமா?" கெஞ்சினேன் நான்.

"எங்களுக்கு எல்லாம் சேத்து தான் சாப்பாடு வாங்கி வச்சிருக்கோம்." ஹரன் தொடர்ந்தார்.

"நான் இன்னைக்கு வர்றது உங்களுக்குத் தெரியும் தானே? எனக்கும் சேத்து சாப்பாடு வாங்கியிருக்கலாமே?" என்று கேட்டேன்.

"ஐயோ உங்களுக்காகத் தான் நாங்கள் சாப்பிடாமக் காத்துக்கொண்டு இருக்கிறோம்." என்றார் ஹரன்.

"அடப்பாவிகளா, நான் வர்ற வரைக்கும் காத்திருந்து என்னை விட்டுட்டு சாப்பிடப் போறாங்களா?" மனசுக்குள் அதிர்ந்தேன் நான்.

"சாப்பிட்டுட்டு அப்புறமா வாஷ் எடுத்துக்கிறீங்களா? பசிக்குது." என்றார் ஹரன்.

"அப்போ எனக்கும் சாப்பாடு தருவீங்களா?" பரிதாபமாகக் கேட்டேன்.

குழப்பத்துடன் ஹரன் சொன்னார், "ஐயோ உங்களுக்காகத் தானே காத்துக்கிட்டு இருக்கோம், சாப்பிடாம?"

சாப்பிடும் போது தான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. எங்களுக்கு நாங்கள் என்று சொல்லும் போது நமக்கு நாங்கள் என்று அனைவரையும் சேர்த்துக் கொள்ளும் (சொல்லும்) பாசக்காரங்க இலங்கைத் தமிழர்கள் இவர்கள் என்று. 

"ச்சே" என்று சொல்லிக் கொண்டேன். 

Friday, February 22, 2013

இந்த ’லெந்து’வுக்கு நான் விட்டது எது?


Bob Clements (Bib's Banter) என்னும் எழுத்தாளரின் ஒரு எழுத்தாக்கத்தை தமிழாக்கம் செய்திருக்கிறேன். அவரது அனுமதியுடன் :) - S.Michael

பாப் இந்த லெந்து காலத்துல எத விட்டுருக்கிறே?”

ஒவ்வொரு வருஷமும் இந்தக் கேள்வியைத் தான் என்னிடம் கேட்பார்கள். லெந்து என்றால் என்னவென்று 

தெரியாதவர்களுக்கு - ஈஸ்ட்டர் பண்டிகைக்கு முன்னால் வரும் 40 நாட்கள் (கிறிஸ்தவ விரதம்?!) தான் லெந்து 

காலம் எனப்படும்.

நீ எதையெல்லாம் விட்டுருக்கிறே?” பதிலுக்கு நான் கேள்வி கேட்பேன்.

தண்ணி

இறைச்சி

ஸ்வீட்ஸ்

சிகரெட்

இந்தப் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதைப் போலவே எனக்குரிய கேள்வியும் தொடரும்...

நீ எத விட்டுருக்கிறே?”

என்னையே...”

உன்னையே விட்டுருகிறியா?”

ஆமா என்னியத்தான்

உன்னிய நீயே விட முடியாது பாப். நீ வேற எதையாவது விடணும். சாக்லேட், குடி, நான் வெஜ் மாதிரி...”

இல்ல நான் என்னையே விட்டுட்டேன்.”

இப்போது மேல் லோகத்தில் கடவுள் புன்னகைக்க தேவதூதர்கள் சிரித்தனர். “ஆமா பாப் நீ இப்ப எங்க கிட்டஎன்றனர்.

கடவுளே இது ரொம்ப கஷ்ட்டம் தான்

ஆமா எனக்குத் தெரியும் பாப். ஆனா அது தான் ஒரே வழி.”

நான் வளைந்து, நெளிந்து போராடி, ஓடிப் போய், ஒலகத்து இன்பங்கள்ல ஒளிஞ்சுக்கலாம்னு நெனச்சேன்.”

ஆமா நாங்க மேல இருந்து பாத்துக்கிட்டு தான் இருந்தோம். உன்னையே எரிச்ச விஷயங்களோட நீ போராடிட்டு இருந்ததப் பாத்தோம். உன்னையே கஷ்ட்டப்படுத்தற விஷயங்களுக்கு உள்ளால நீ போய்ட்டு இருந்ததப் பாத்தோம். நீ தப்பிக்கறதுக்காகப் போராடுறதப் பாத்துட்டு இருந்தோம். தூதர்கள் எல்லாம் அழுதுட்டு இருந்தாங்க.”

நீங்க என்னப் பிடிச்சு தூக்கி விட்டுருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யல?”

ஏன்னா நீ தான் உன்னையே விட்டுறணும் மகனே.”

ஆமாநான் குதூகலதோடு சொன்னேன், “என்னை நானே விட்டுற வேண்டியதாத் தான் இருந்தது.”

நண்பர்கள் கேட்டார்கள், “உன்னை நீயே விட்டுடுறதுங்கறது என்ன நல்லாவா இருந்தது? குடி, வாழ்க்கையில உள்ள சில இன்பங்கள் இதுங்கள ஒரு மாசத்துக்கு விட்டுடுறது  தான் உண்மையிலேயே தியாகம் தெரியுமா?”

தியாகமா?” நான் சிரித்தேன்.

ஏன் சிரிக்கிறே?”

என்னை நானே விடுறப்ப, அது தான் பெருமையான, மகிழ்ச்சியான அனுபவம். நான் எதையும் தியாகம் செய்யல, மேல இருக்கறவரு தான் தன்னோட மேலான தன்மைய தியாகம் பண்ணிட்டு, என்னோட அழுக்குக் கையப் பிடிச்சுக்கறார்.”


எங்கேயோ மேல் உலகத்தில் தேவதூதர்கள் ஒரு குழந்தையைத் தூக்கிப் போட்டு விளையாடுவது போல என்னைப் பந்தாடி, கட்டியணைத்து நேசித்தனர். அவர்கள் சிரித்த சத்தம் கேட்டது.

நம்மை நாமே விட்டுவிடுவது ஒரு அற்புதமான அனுபவம் தான்.

Welcome to yfc

Welcome to YFC